இடுகைகள்

காடை வளர்ப்பு பகுதி 4

படம்
காடை வளர்ப்பு பகுதி 4 காடை இறைச்சி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். தோலில் குறைந்த அளவே கொழுப்பு இருக்கிறது. ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் நிறைந்ததாக காடை இறைச்சி உள்ளது.  குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்தன்மை காடை இறைச்சிக்கு இருக்கிறது. மூட்டு அழற்சி நோயை இந்த இறைச்சி கட்டுப்படுத்து கிறது. ரத்த சோகை நோய் இருப்பவர்கள் இந்த இறைச்சியை அதிகம் உண்ணலாம். ரத்தத்தில் உள்ள நச்சுகள், கன உலோகங் களை இது வெளியேற்ற உதவுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சத்தும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. நினைவாற்றலையும், மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை வலுவடைய செய்யும். இதயத்தசைகளை பலப்படுத்தும். இளமையை பாதுகாக்கும். தலைமுடியையும் வலுவாக்கும். காடை இறைச்சியும், முட்டையும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக பலன் அளிக்கும். STAR CHICKEN Sri Sai City Plot No 1 First Street, Walajabad Thammanur, Tamil Nadu 631605 contact us : 9952442425, 7904138958.

காடை வளர்ப்பு பகுதி 3

படம்
காடை வளர்ப்பு பகுதி 3 இறகுகளின் வண்ணம் மற்றும் தோற்றத்தை வைத்து ஆண், பெண் காடைகளை 3 வாரத்தில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். பெண் காடைகளின் இறகுகள் நீளமாகவும், கூர்மையாகவும் இருக்கும். தொண்டை மற்றும் மார்பு பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். ஆண் காடைகள் பழுப்புநிற இறகுகளை கொண்டதாக இருக்கும். இவற்றின் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் கரும்புள்ளிகள் காணப்படாது. ஆண் (சேவல்) மற்றும் பெண் (பெட்டை) காடைகள் பாலினம் கண்டறியப்பட்டவுடன் அவைகளை பிரித்து வளர்க்க வேண்டும். பெட்டைகளை 6 வார பருவத்தில் முட்டையிடும் பிரிவுக்கு மாற்றி விட வேண்டும். 5 அல்லது 6 காடைகளுக்கு ஒரு முட்டையிடும் பெட்டி வைக்கலாம். பெட்டியின் அளவு நீளம் 20 செ.மீட்டரும், அகலம் 9 செ.மீட்டரும், உயரம் 20 செ.மீட்டரும் இருக்க வேண்டும். ஒரு முட்டை 8 முதல் 13 கிராம் வரை எடை கொண்டதாகும். 8–வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 சதவீதம் என்ற நிலையை அடையும். முட்டையிடாத பெட்டைகளை பண்ணையில் இருந்து நீக்கி விட வேண்டும். அடை முட்டைகளை சேகரிக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனெனில் முட்டையின் ஓடுகள் எளிதில் உடையக்கூடியதாகும். 10 முதல...

காடை வளர்ப்பு பகுதி -2

படம்
கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டு சுவர்   களின் உயரம் 5  முதல் 7 அடி வரை இருத்தல் வேண்டும். 1.5 அடி உயர பக்கவாட்டு சுவரின் மேல் 5 அடி உயர கம்பி வலையை பொருத்த வேண்டும். பண்ணையை, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து தொலைவில் அமைப்பது நல்லது. ஆழ்கூள வளர்ப்பு முறை, கூண்டுகள் வளர்ப்பு முறை ஆகிய இருவிதத்தில் காடை குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணையையும், உபகரணங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.  ஆழ்கூள வளர்ப்பு முறையில் முதலில் ஆழ்கூளத்தை அப்புறப்படுத்தி உட்புற சுவர்களை தரமான கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர் உமியை பரப்பி, அதன்மேல் சொரசொரப்பான தாள்களை பரப்ப வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளை சோதித்து ஏதேனும் பழுது இருந்தால் சரி செய்ய வேண்டும். தடுப்பான்கள் 30 செ.மீ முதல் 45 செ.மீட்டர் உயரம் வரை இருக்க வேண்டும். தகரம்,  தடிமனான அட்டைகள், பிளைவுட் போன்ற பொருட்களை தடுப்பான்களாக பயன்படுத்தலாம். ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் என்ற அடிப்படையில் விளக்குகளை வெப்பத்திற்காக அமைக்க வேண்டும். காடை குஞ்ச...

காடை வளர்ப்பு பகுதி -1

படம்
                      அசைவ உணவுப்  பிரியர்கள் ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பும் இறைச்சியாக காடை இருக்கிறது. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சாம்பல் சத்து, கலோரி போன்றவை காடையில் நிறைந்திருக்கிறது. இதனால் காடை இறைச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், காடை வளர்ப்பு தொழில் தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது. இதற்கு அதிக இடம் தேவையில்லை. ஒரு சதுர அடியில் 5 காடைகளை வளர்க்கலாம். கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அதனால் எல்லா தட்பவெப்ப நிலைகளையும் இது தாக்குப்பிடித்து வளரும். குஞ்சுகள் 5 முதல் 6 வாரத்துக்குள் இறைச்சிக்காக விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துவிடும். இதனால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலே வருமானம் பெற முடியும். ஒரு கோழி வளர்க்கக்கூடிய இடத்தில் 5 முதல் 7 காடைகளை வளர்க்கலாம். தீவனத்தை புரதச்சத்தாக மாற்றும் திறன் காடைகளுக்கு உண்டு. அதனால் இவைகளுக்கு கோழிகளைப் போல் தடுப்பூசி போடத்தேவையில்லை. STAR CHICKEN Sri Sai City Plot No 1 First Street, Walajabad Thammanur, Tamil...