காடை வளர்ப்பு பகுதி -1

                      அசைவ உணவுப்  பிரியர்கள் ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பும் இறைச்சியாக காடை இருக்கிறது. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சாம்பல் சத்து, கலோரி போன்றவை காடையில் நிறைந்திருக்கிறது. இதனால் காடை இறைச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், காடை வளர்ப்பு தொழில் தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது.

இதற்கு அதிக இடம் தேவையில்லை. ஒரு சதுர அடியில் 5 காடைகளை வளர்க்கலாம். கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அதனால் எல்லா தட்பவெப்ப நிலைகளையும் இது தாக்குப்பிடித்து வளரும். குஞ்சுகள் 5 முதல் 6 வாரத்துக்குள் இறைச்சிக்காக விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துவிடும். இதனால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலே வருமானம் பெற முடியும். ஒரு கோழி வளர்க்கக்கூடிய இடத்தில் 5 முதல் 7 காடைகளை வளர்க்கலாம்.

தீவனத்தை புரதச்சத்தாக மாற்றும் திறன் காடைகளுக்கு உண்டு. அதனால் இவைகளுக்கு கோழிகளைப் போல் தடுப்பூசி போடத்தேவையில்லை.







STAR CHICKEN
Sri Sai City Plot No 1 First Street, WalajabadThammanur, Tamil Nadu 631605
contact us : 9952442425, 7904138958.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடை வளர்ப்பு பகுதி 4

காடை வளர்ப்பு பகுதி 3