காடை வளர்ப்பு பகுதி -2

கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டு சுவர்   களின் உயரம் 5  முதல் 7 அடி வரை இருத்தல் வேண்டும். 1.5 அடி உயர பக்கவாட்டு சுவரின் மேல் 5 அடி உயர கம்பி வலையை பொருத்த வேண்டும். பண்ணையை, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து தொலைவில் அமைப்பது நல்லது.

ஆழ்கூள வளர்ப்பு முறை, கூண்டுகள் வளர்ப்பு முறை ஆகிய இருவிதத்தில் காடை குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணையையும், உபகரணங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.  ஆழ்கூள வளர்ப்பு முறையில் முதலில் ஆழ்கூளத்தை அப்புறப்படுத்தி உட்புற சுவர்களை தரமான கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர் உமியை பரப்பி, அதன்மேல் சொரசொரப்பான தாள்களை பரப்ப வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளை சோதித்து ஏதேனும் பழுது இருந்தால் சரி செய்ய வேண்டும். தடுப்பான்கள் 30 செ.மீ முதல் 45 செ.மீட்டர் உயரம் வரை இருக்க வேண்டும். தகரம்,  தடிமனான அட்டைகள், பிளைவுட் போன்ற பொருட்களை தடுப்பான்களாக பயன்படுத்தலாம். ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் என்ற அடிப்படையில் விளக்குகளை வெப்பத்திற்காக அமைக்க வேண்டும்.


காடை குஞ்சுகள் நீர் அருந்துவதற்கு ஆழமில்லாத தட்டுகளை பயன்படுத்த வேண்டும். குஞ்சுகள் அந்த தட்டுகளில் மூழ்கி இறந்து விடாமல் இருக்க, கோலி குண்டுகளை சில நாட்கள் போட்டுவைக்கலாம். குடிநீர் மற்றும் தீவன கலன்களை வெப்பம் கிடைக்கும் இடத்தின் விளிம்பில் வைக்க வேண்டும்.

காடைகளை கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால் ஒவ்வொரு கூண்டையும், 5 அல்லது 6 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு அடுக்கையும் 2 அறைகளாக பிரிக்க வேண்டும். அகலம் 60 செ.மீ, நீளம் 60 செ.மீ மற்றும் உயரம் 25 செ.மீ இருக்க வேண்டும். எச்சத்தை கீழே விழாமல் தடுக்க ஒவ்வொரு அடுக்கின் கீழே ஒரு தட்டு வைக்கப்பட வேண்டும். குடிநீர் மற்றும் தீவன தொட்டிகள் கூண்டின் முன்புறமும், பின்புறமும் வைக்க வேண்டும்.




STAR CHICKEN
Sri Sai City Plot No 1 First Street, WalajabadThammanur, Tamil Nadu 631605
contact us : 9952442425, 7904138958.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடை வளர்ப்பு பகுதி 4

காடை வளர்ப்பு பகுதி -1

காடை வளர்ப்பு பகுதி 3